https://img.maalaimalar.com/Articles/2020/May/202005252046439476_Tamil_News_532-flights-carrying-39231-passengers-operated-on-Monday_SECVPF.gif

இந்தியா முழுவதும் இன்று 532 விமானங்கள் மூலம் 39,231 பேர் பயணித்தனர்: 630 விமானங்கள் ரத்து

இந்தியா முழுவதும் இன்று 532 விமானங்கள் மூலம் 39,231 பேர் பயணம் செய்துள்ளதாக மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சுமார் 60 நாட்களுக்குப்பின் இன்று உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கின. மேற்கு வங்காள மாநிலம் இன்று விமான சேவையை தொடங்கவில்லை. மகாராஷ்டிரா விமானம் 50 விமானங்களுக்கு மட்டுமே அனுமதி அளித்தது.
இன்று நாடு முழுவதும் 532 விமானங்கள் இயக்கப்பட்டன. இதில் 39,231 பேர் பயணித்தனர் என்று மத்திய விமான போக்குவரத்துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
பல்வேறு காரணங்களால் 630 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. பயணிகள் விமான நிலையம் வந்த பிறகே விமானங்கள் ரத்து செய்யப்பட்டது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதால் மிகுந்த கோபம் அடைந்தனர்.
ஆந்திர பிரதேச மாநிலம் நாளை முதல் விமான சேவைக்கு அனுமதி அளித்தள்ளது. மேற்கு வங்காளத்தில் 28-ந்தேதியில் இருந்து சேவை தொடங்க இருக்கிறது. இன்று பயணம் செய்வதற்காக மே 22-ந்தேதியில் இருந்து 1,100 விமானங்களுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Curfew | Domestic Flight Operation | உள்நாட்டு விமான சேவை | ஊரடங்கு உத்தரவு