https://img.maalaimalar.com/Articles/2020/May/202005250452037017_Tamil_News_The-total-number-of-Coronavirus-death-toll-in-Russia-crosses_SECVPF.gif

ரஷ்யாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 500-ஐ தாண்டியது

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 500-ஐ தாண்டியுள்ளது.

மாஸ்கோ:
கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 54 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 3.46  லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவை தொடர்ந்து ரஷ்யா நாட்டில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.  
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் ரஷ்யா மூன்றாவது இடத்தில் உள்ளது.   
இந்நிலையில், ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 500-ஐ தாண்டியுள்ளது.
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,599 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 3,44,481 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு 153 பேர் பலியாகினர். இதையடுத்து, அங்கு பலியானோர் எண்ணிக்கை 3,541 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து ஒரு லட்சத்து 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

Related Tags :

Coronavirus | கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் பற்றிய செய்திகள் இதுவரை...

https://img.maalaimalar.com/Articles/2020/May/202005250255398889_Tamil_News_total-number-of-coronavirus-positive-cases-in-Pakistan-2164_TMBVPF.gif

பாகிஸ்தானில் ஒரே நாளில் 2164 பேருக்கு கொரோனா பாதிப்பு

மே 25, 2020 02:05

https://img.maalaimalar.com/Articles/2020/May/202005250105320818_Tamil_News_9-more-CRPF-jawans-which-has-recorded-maximum-COVID19-cases_TMBVPF.gif

டெல்லியில் மேலும் 9 சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு

மே 25, 2020 01:05

https://img.maalaimalar.com/Articles/2020/May/202005250026206033_Tamil_News_TN-Govt-announce-travel-ti-tamilnadu-must-get-e-pass_TMBVPF.gif

தமிழகத்திற்கு விமானத்தில் வருவோர் கட்டாயம் இ-பாஸ் பெறவேண்டும் - தமிழக அரசு அறிவிப்பு

மே 25, 2020 00:05

https://img.maalaimalar.com/Articles/2020/May/202005250009467733_Tamil_News_The-total-number-of-positive-cases-in-the-Dharavi-increases_TMBVPF.gif

மும்பை தாராவியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1541 ஆக அதிகரிப்பு

மே 25, 2020 00:05

https://img.maalaimalar.com/Articles/2020/May/202005242254018813_Tamil_News_Total-positive-cases-in-Rajasthan-stand-at-7028_TMBVPF.gif

ராஜஸ்தானில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியது

மே 24, 2020 22:05

மேலும் கொரோனா வைரஸ் பற்றிய செய்திகள்