சகோதரத்துவம், நல்லிணக்கம் மேலும் அதிகரிக்கட்டும்... ஜனாதிபதி-பிரதமர் ரம்ஜான் வாழ்த்து
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி:
இந்தியாவில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஊரடங்கு விதிமுறைகள் காரணமாக மசூதிகள், பள்ளிவாசல்களில் தொழுகை நடைபெறவில்லை. மக்கள் வீடுகளிலேயே சமூக விலகலை கடைப்பிடித்து தொழுகை நடத்தி, ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்கின்றனர். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, இஸ்லாமிய மக்களுக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘ரமலான் திருநாள் அன்பு, சகோதரத்துவம், அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் அடையாளம். தனிநபர் இடைவெளியை பின்பற்றி பண்டிகையை கொண்டாடுங்கள்’ என கூறியுள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ரம்ஜான் பண்டிகையால் இரக்கம், சகோதரத்துவம், நல்லிணக்கம் மேலும் அதிகரிக்கட்டும். எல்லோரும் ஆரோக்கியமாகவும், வளமாகவும் இருக்க வாழ்த்துக்கள்’ என குறிப்பிட்டுள்ளார்.
Related Tags :
EidAlFitr | ரம்ஜான் பண்டிகை | பிரமர் மோடி | ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்