பள்ளிகள் திறப்பு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் – அமைச்சர் செங்கோட்டையன் – மின்முரசு

பள்ளிகள் திறப்பு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறினார்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நீட் தேர்வுக்கான பயிற்சிகள் ஜூன் மாதம் 2-ம் வாரத்தில் இருந்து தொடங்க உள்ளது. 7 ஆயிரத்து 300 மாணவர்களுக்கு 9 கல்லூரிகளில் 35 நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இந்தாண்டு நீட் தேர்வில் 100 அரசுப் பள்ளி மாணவர்களாவது வெற்றி பெற்று மருத்துவக் கல்லூரிக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.

கோபி பகுதியில் ரூ.73 லட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்துப் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. ரூ.102 கோடி மதிப்பீட்டில் பவானி ஆற்றின் குறுக்கே 4 தடுப்பணைகள் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் நிறுத்தி வைக்கப்பட்ட அத்திக்கடவு-அவினாசி திட்டத்துக்கான முதல் கட்ட பணிகள் தற்போது மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது என தெரிவித்தார்.

அப்போது செய்தியாளர்கள் அமைச்சரிடம், ‘10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்களா’? என கேள்வி எழுப்பினர்.

அதற்கு அமைச்சர், ‘மதிப்பெண்கள் வந்த பிறகு அரசு அதை கூர்ந்து கவனித்து நடவடிக்கை எடுக்கும்’ என்று பதில் அளித்தார்.

Related Tags :

Source: Maalaimalar

https://secure.gravatar.com/avatar/c78300fab31b0f0459ea70f75dfa173e?s=100&d=mm&r=g

murugan

Post navigation

ரஷ்யாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 500-ஐ தாண்டியதுகொரோனா அப்டேட் – உலக அளவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 23 லட்சத்தை நெருங்குகிறது

Related Posts

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/05/202005260036554885_1_Lockdown2._L_styvpf.jpg

5 வயது சிறுவனின் அசாத்திய விமானப்பயணம்

murugan May 26, 2020 0 comment

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/05/202005252209559790_Tamil_News_States-Can-not-Hire-Workers-From-UP-Without-Permission-Yogi_SECVPF.gif

எங்கள் மாநில தொழிலாளர்களை அனுமதியின்றி எந்த மாநிலமும் பணிக்கு அமர்த்த முடியாது: யோகி ஆதித்யநாத்

murugan May 26, 2020 0 comment

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/05/202005252241593597_Tamil_News_Corona-confirm-in-Raghava-Lawrence-trust_SECVPF.gif

ராகவா லாரன்ஸ் உடைடில் தங்கியிருக்கும் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

murugan May 25, 2020 0 comment