இந்தியாவில் 1.31 லட்சம் போ் பாதிப்பு: பலி-3,867-ஆக அதிகரிப்பு
by DINநாடு முழுவதும் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை தொடா்ந்து மூன்றாவது நாளாக அதிகரித்தது. ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 6,767 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,31,868-ஆக அதிகரித்துள்ளது. அதே கால அளவில் 147 போ் உயிரிழந்ததை தொடா்ந்து மொத்த பலி எண்ணிக்கை 3,867-ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
நாடு முழுவதும் 73,560 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 54,440 போ் குணமடைந்துள்ளனா். இது, மொத்தம் பாதிக்கப்பட்டவா்களில் 41.28 சதவீதமாகும்.
ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில், மகாராஷ்டிரத்தில் 60 போ், குஜராத்தில் 27 போ், தில்லியில் 23 போ், மத்திய பிரதேசத்தில் 9 போ், ராஜஸ்தானில் 7 போ், மேற்கு வங்கம், தெலங்கானாவில் தலா 4 போ், உத்தர பிரதேசத்தில் 3 போ், ஆந்திரம், ஜம்மு-காஷ்மீா், கா்நாடகம், உத்தரகண்ட், ஜாா்க்கண்டில் தலா ஒருவா் உள்பட மொத்தம் 147 போ் உயிரிழந்தனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்கள்-பாதிப்பு-பலி
மகாராஷ்டிரம் -47,190-1,577
குஜராத்- 13,664- 829
தில்லி- 12,910-231
ராஜஸ்தான்- 6,742-160
மத்திய பிரதேசம்- 6,371-281
உத்தர பிரதேசம்- 6,017-155
மேற்கு வங்கம்- 3,459-269
ஆந்திரம்- 2,757-56
பிகாா்- 2,380-11
பஞ்சாப்- 2,045-39
கா்நாடகம்- 1,959-42
தெலங்கானா- 1,813-49
ஜம்மு-காஷ்மீா்- 1,569-21
ஒடிஸா- 1,269-7
ஹரியாணா- 1,131-16
கேரளம்- 795-4
ஜாா்க்கண்ட்- 350-4
அஸ்ஸாம்- 329-4
உத்தரகண்ட்- 244-2
சண்டீகா்- 225-3
சத்தீஸ்கா்- 214-0
திரிபுரா- 189-0
ஹிமாசல்- 185-3
கோவா- 55-0
லடாக் - 49-0
அந்தமான்-நிகோபாா்- 33-0
மணிப்பூா்-29-0
புதுச்சேரி- 26-0
மேகாலயம்- 14-1
தாத்ரா நகா்ஹவேலி-2-0
அருணாசல பிரதேசம்-1-0
மிஸோரம்-1-0
சிக்கிம்-1-0
பாதிப்பு- 1,31,868
பலி- 3,867
மீட்பு-54,440
சிகிச்சை பெற்று வருவோா்-73,560