https://img.dailythanthi.com/Articles/2020/May/202005252113047807_Flying-To-Mumbai-Maharashtras-New-Rules-You-Need-To-Know_SECVPF.gif

விமானப் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்- மராட்டிய அரசு வெளியீடு

விமானப்பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மராட்டிய அரசு வெளியிட்டுள்ளது.

மும்பை,நாடு தழுவிய பொது ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், இன்றுமுதல் உள்நாட்டு விமான சேவையை தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்தது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கொல்கத்தா போன்ற மாநிலங்கள் முதலில் விமான சேவைக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. பின்னர் விமான இயக்கத்திற்கு அனுமதி அளித்தனர்.

விமான சேவையில் முக்கிய பங்கு வகிக்கும் மும்பை விமான நிலையத்தில் தலா 25 விமானங்கள் தரையிறங்கவும், புறப்படவும் மட்டுமே மகாராஷ்டிர அரசு அனுமதி அளித்தது. மேலும் பல மாநிலங்கள் தானாகவே பல்வேறு வழிகாட்டுதல் நடைமுறைகளை வெளியிட்டுள்ளது. அந்த வகையில், விமான பயணிகளுக்கு  மராட்டிய அரசு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்கள் வருமாறு:-

  1. ஆரோக்கிய சேது செயலி கட்டாயம் தங்களது செல்போனில்  நிறுவியிருக்க வேண்டும்.
  2. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து வருகை தந்தாலோ, அல்லது ஏதேனும் அறிகுறிகள் இருந்தாலோ  அறிவிப்பை தாக்கல் செய்ய வேண்டும்.
  3. வருகையின் போது உடல் வெப்ப நிலையைக் காண்பிப்பது கட்டாயம்.
  4. அறிகுறிகள் தென்படுபவர்கள் சுகாதார மையங்களுக்கு அழைத்துச்செல்லப்படுவார்கள்.
  5. மராட்டியத்திற்கு வரும் அனைத்து பயணிகளும் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். கையில் தனிமைப்படுத்தலுக்கான முத்திரை குத்தப்படும்.
  6. ஒருவாரத்திற்குள் மீண்டும் மாநிலம் திரும்புபவர்களுக்குத் தனிமைப்படுத்துதலிலிருந்து விலக்களிக்கப்படும்.
  7. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்குப் பயணிக்க அனுமதி அளிக்கப்படமாட்டாது.
  8. நிபந்தனைகளைப் பின்பற்றாதவர்கள் நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும். 
  9. பயணிகள், விமான சிப்பந்திகள், ஊழியர்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டும், தூய்மை விதிகளை பின்பற்றுதல் வேண்டும். 
  10. வீட்டில் இல்லாமல் வேறு இடங்களிலிருந்தால், அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.