முக கவசம் இல்லாமல் வெளியே வருவது நோய் தொற்றை அதிகரிக்கும் என அதிகாரிகள் எச்சரிக்கை
முக கவசம் இல்லாமல் வெளியே வருவது நோய் தொற்றை அதிகரிக்கும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை,சென்னையில் உள்ள ராயபுரம் மண்டலத்தில் இன்று மேலும் 90 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ராயபுரம் மண்டலத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 2071 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து பூரண குணமடைந்து 803 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரை சிகிச்சை பலனின்றி 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், முகக்கவசம் இல்லாமல் வெளியே வருவது நோய்த்தொற்றை மேலும் அதிகரிக்கும் என்று என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி தமிழகத்தில் 16277 - பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.