
சீனாவில் புதிதாக 39 பேருக்கு கொரோனா தொற்று
சீனாவில் புதிதாக 39 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
பீஜிங், சீனாவில் புதிதாக 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.இதில் 36 பேருக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் கொரோனா வந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.அறிகுறி இல்லாமல் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களில், 30 பேர் அந்த வைரசின் பிறப்பிடமான உகான் நகர் அமைந்துள்ள ஹுபெய் மாகாணத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.