https://img.dailythanthi.com/Articles/2020/May/202005252050385891_Coronavirus-confirmed-2436-new-cases-in-Maharastra_SECVPF.gif

மராட்டியத்தில் புதிதாக 2,436 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மராட்டியத்தில் இன்று புதிதாக 2,436 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை,இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. நாட்டில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் மராட்டியம் முதல் இடத்தில் உள்ளது. 

இந்நிலையில் மராட்டியத்தில் இன்று மேலும் 2,436 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52,667 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 60 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் பலியனவர்களின் எண்ணிக்கை 1,695 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 1,186 பேர் குணமடைந்து திரும்பியுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 15,786 ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.