![https://img.dailythanthi.com/Articles/2020/May/202005250805181345_2-dead-10-injured-in-multiple-St-Louis-shootings_SECVPF.gif https://img.dailythanthi.com/Articles/2020/May/202005250805181345_2-dead-10-injured-in-multiple-St-Louis-shootings_SECVPF.gif](https://img.dailythanthi.com/Articles/2020/May/202005250805181345_2-dead-10-injured-in-multiple-St-Louis-shootings_SECVPF.gif)
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு; 2 பேர் பலி
அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவங்களில் 2 பேர் பலியாகினர்.
செயின்ட் லூயிஸ்,அமெரிக்காவின் செயின்ட் லூயிசில் கார் ஒன்றில் வைத்து மர்ம நபரால் பலமுறை துப்பாக்கியால் சுடப்பட்டு உள்ளார். இதன்பின்னர் மருத்துவமனையில் அவர் உயிரிழந்து உள்ளார்.இதேபோன்று மற்றொரு துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டு உள்ளார். இது தவிர 10 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபற்றிய கூடுதல் விவரங்களை போலீசார் வெளியிடவில்லை.
நேற்று முன்தினம் நடந்த துப்பாக்கி சூடு சம்பவங்களில் 2 பேர் பலியான நிலையில் இந்த சம்பவம் நடந்து உள்ளது.