https://d13m78zjix4z2t.cloudfront.net/ashok-chawan.jpg

முன்னாள் மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவானுக்கு கொரோனா பாதிப்பு!

by

மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவானுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது

நாட்டின் கொரோனா மையமாக மாறியிருக்கும் மகாராஷ்டிரா மாநிலத்தில் நாள்தோறும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. 

அங்கு சமூக பரவல் நிலையை எட்டியுள்ளதா என்ற அச்சநிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா தடுப்பில் முன்னிலையில் இருக்கும் மருத்துவ பணியாளர்கல், சுகாதார பணியாளர்கள், காவல்துறையினர், பிற அரசுத்துறை ஊழியர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டிலேயே அதிகளவாக கொரோனா பாதிப்பு 50,000 என்ற எண்ணிக்கையையும் அங்கு கடந்துள்ளது.

இதனிடையே, அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தற்போதைய அரசில் பொதுப்பணித்துறை அமைச்சருமாகிய அசோக் சவானுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு வயது 61.

அமைச்சரவையில் இருவருக்கு கொரோனா:

இதன் மூலம் உத்தவ் தாக்கரே அமைச்சரவையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2ஆக அதிகரித்துள்ளது.

முன்னதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும் வீட்டுவசதித்துறை அமைச்சருமான ஜிதேந்திர அவாதிற்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது, இருப்பினும் அவர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினார்.

கொரோனா பாதிப்புக்கு ஆளான அசோக் சவானுக்கு அறிகுறி ஏதும் இல்லை என்றும் தற்போது அவர் தனது சொந்த ஊரான Nanded-ல் உள்ள அவரின் இல்லத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். மும்பையில் இருந்து மராத்வாடா மாவட்டத்திற்கு அவர் அடிக்கடி பயணம் மேற்கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன.

மகாராஷ்டிராவில் இதுவரை 52,667 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,695 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குடியரசுத்தலைவர் ஆட்சி:

இந்நிலையில், மாநில அரசு கொரோனா தடுப்பில் மோசமாக தோல்வியை தழுவியிருப்பதாகவும், இதன் காரணமாக மாநிலத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்தவேண்டும் எனவும் மற்றொரு முன்னாள் முதல்வரும், பாஜக தலைவருமான நாராயன் ரானே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.