https://d13m78zjix4z2t.cloudfront.net/bpu-2.png

ஊரடங்கால் 3 மாதங்களுக்கு பிறகு தாயை சந்தித்த 5 வயது சிறுவன்!

by

டெல்லியில் இருந்து பெங்களூரு சென்ற விமானத்தில் 5 வயது சிறுவன் தனியாக பயணம் செய்து 3 மாதங்களுக்கு பிறகு தனது தாயை சந்தித்துள்ளான்.

கொரோனா பாதிப்பால் இந்தியாவில் மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. கொரோனா தொற்றால் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருப்பது மட்டுமல்லாமல் பொருளாதாரமும் கடும் சரிவை சந்தித்துள்ளது. அதனால் மூன்றாவது மற்றும் நான்காவது கட்ட ஊரடங்கு நீட்டிப்பின் போது சில தளர்வுகள் அளித்து மத்திய அரசு உத்தரவிட்டது. அதன் ஒரு பகுதியாக, மே 25 முதல் உள்நாட்டு விமான சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டது. 

அதன்படி, இன்று முதல் இந்தியாவில் உள்நாட்டு சேவை தொடங்கப்பட்டு விமானங்கள் இயக்கப்பட்டன. ஊரடங்கு உத்தரவால் தங்கள் குடும்பத்தினரை பிரிந்து பல்வேறு மாநிலங்களில் சிக்கியிருந்த மக்கள் உற்சாகத்துடன் சொந்த ஊர் திரும்பி வருகின்றனர்.

https://d13m78zjix4z2t.cloudfront.net/inline-images/boy_2.png

இந்நிலையில் பெங்களூரூவைச் சேர்ந்த 5 வயது சிறுவன் விஹான் சர்மா 3 மாதங்களுக்கு பிறகு தனது தாயை சந்தித்துள்ளான். டெல்லியில் இருந்து பெங்களூரு கிளம்பிய விமானத்தில் சிறுவன் தனியாக பயணம் செய்துள்ளான். விமான நிலையம் வந்திறங்கிய சிறுவனை அவனது தாய் அழைத்து சென்றுள்ளார். 3 மாதங்களுக்கு பிறகு தனது மகனை சந்தித்துள்ளதாக தாய் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு விமான சேவை தொடங்கப்பட்டிருந்தாலும், பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.