தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,000ஐ கடந்தது!
by saravanamanojதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,082 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,082 ஆக உயர்ந்துள்ளது.
பலி எண்ணிக்கை:
தமிழகத்தில் இன்று 7 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களில் 6 பேர் சென்னையை சேர்ந்தவர்களும் ஒருவர் செங்கல்பட்டு மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர்.
குணமடைந்தோர் :
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 407 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதனால் இதுவரை தமிழகத்தில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 8,731 ஆக அதிகரித்தது. தற்போது 8,230 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பாதிப்பு - பாலின வாரியான விவரம்:
தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதியான 17,082 பேரில், 10,831 பேர் ஆண்கள், 6,246 பேர் பெண்கள். மேலும் மூன்றாம் பாலினத்தவர்கள் 5 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை 4,02,680 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இன்று மட்டும் 11,428 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மாவட்ட வாரியான பாதிப்பு நிலவரம்:
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 549 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதை அடுத்து, அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 11,131ஆக உயர்ந்துள்ளது.
செங்கல்பட்டு 54, திருவள்ளூர் 36, காஞ்சிபுரம் 19, திருவண்ணாமலை 11, ராமநாதபுரம் 5, ராணிப்பேட்டை மற்றும் விருதுநகரில் தலா 4, கன்னியாகுமரி மற்றும் தேனியில் தலா 2, மற்றும் தர்மபுரி, கிருஷ்ணகிரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் நோய் தொற்று உறுதியாகியுள்ளது.
மே மாத கொரோனா பாதிப்பு நிலவரம்:
மே 01 - 2526 மே 11 - 8002 மே 21 - 13967
மே 02 - 2757 மே 12 - 8718 மே 22 - 14753
மே 03 - 3023 மே 13 - 9227 மே 23 - 15,512
மே 04 - 3550 மே 14 - 9674 மே24 - 16,277
மே 05 - 4058 மே 15 - 10108 மே25- 17,082
மே 06 - 4829 மே 16 - 10585
மே 07 - 5409 மே 17 - 11224
மே 08 - 6009 மே 18 - 11760
மே 09 - 6535 மே 19 - 12448
மே 10 - 7204 மே 20 - 13191