இந்தியாவில் உள்நாட்டு விமான சேவை தொடங்கியது!
by saravanamanojஇந்தியா முழுவதும் இன்று உள்ளூர் விமான சேவை தொடங்கியுள்ளது.
கொரோனா வைரஸ் நோய் பரவலை தடுப்பதற்காக கடந்த மார்ச் 25-ம் தேதி நாடு தழுவிய ஊரடங்கை மத்திய அரசு அமல்படுத்தியது. இதையடுத்து விமான சேவை படிப்படியாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மே 25ம் தேதி முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கப்படுமென அறிவித்த மத்திய அரசு அறிவித்திருந்தது. இதனை அடுத்து நாடு முழுவதும் இன்று விமான சேவை தொடங்கியுள்ளது
இன்று ஒரு நாளில் சென்னை விமான நிலையத்தில் இருந்து 34 விமானங்கள் இயக்கப்பட உள்ளன. மதுரை, கொல்கத்தா, மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கு சென்னையில் இருந்து விமானங்கள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து முதல் விமானம் காலை 6.40 மணிக்கு 111 பயணிகளுடன் டெல்லிக்கு புறப்பட்டு சென்றது. அடுத்ததாக, 9 மணி அளவில் அந்தமான், பெங்களூரு, டெல்லி, மும்பை, மதுரை, திருச்சி என தொடர்ந்து 5 விமானங்கள் இயக்கப்படுகின்றன. பயணிகள் 3 மணிநேரத்திற்கு முன்னதாக விமான நிலையம் வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.