கார் மோதி தூக்கிவீசப்பட்ட நபர்.. 2 கிமீ தூரம் காரின் மேற்பகுதிலேயே தூக்கிச்செல்லப்பட்ட அவலம்!
by saravanamanojசென்னையில் சொகுசு கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட நபர், காரின் மேற்பகுதியிலேயே, சுமார் 2 கிலோ மீட்டர் சென்ற வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
சென்னை வானகரத்தில் இருசக்கர வாகனம் ஒன்றில் இருவர் பூந்தமல்லி நோக்கி சென்றுள்ளனர். அப்போது பின்னால் வந்த சொகுசு கார் மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்த நிலையில், மற்றொருவர் காரின் மேல் பகுதியில் விழுந்துள்ளார். இதைப் அறியாமல் கார் ஓட்டுனர் அச்சத்தில் காரை அதிவேகமாக ஓட்டிச் சென்றுள்ளார். இந்த அதிர்ச்சியூட்டும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதை பார்த்த போக்குவரத்து காவல்துறையினர், சுமார் 2 கிலோ மீட்டர் விரட்டிச் சென்று, அந்த காரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் காரின் மேற்பகுதியில் அமர்ந்திருந்த நபரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கார் ஓட்டுநரை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்