https://d13m78zjix4z2t.cloudfront.net/ls_0.png

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காசிக்கு நாளை மருத்துவப் பரிசோதனை!

by

தமிழகம் முழுவதும் நூற்றுக்கு மேற்பட்ட பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கைதாகியுள்ள காசிக்கு நாளை மருத்துவபரிசோதனை நடைபெற உள்ளது. 

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் இளம்பெண்களிடம் பழகி, உல்லாசமாக இருந்து அதை வீடியோ எடுத்ததுடன், அதை காட்டி மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்த வழக்கில் நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்த தங்கபாண்டியன் மகன் காசியை (26) போலீசார் கைது செய்தனர். பெண்களை ஏமாற்றி பாலியல் மோசடி செய்ததாக நான்கு வழக்குகள், போஸ்கோ வழக்கு, கந்துவட்டி வழக்கு என, மொத்தம் 6 வழக்குகள் காசி மீது பதிவுசெய்யப்பட்டுள்ளன. காசி மீது  குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது.  
காசி மீதான வழக்கை  5 தனிப்படைகள் மற்றும் சைபர் க்ரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். தற்போது இரண்டாவது முறையாக காசியை தங்கள் காவலில் 6 நாட்கள் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதில் கன்னியாகுமரியைச் சேர்ந்த இளம்பெண் கொடுத்த புகார் தொடர்பாக காசிக்கு நாளை நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைத்து மருத்துவ பரிசோதனை நடக்க உள்ளதாக காவல்துறையினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.