ரூ.64,990 விலையில் அறிமுகமாகியிருக்கும் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!
by arunBattRE நிறுவனம், GPSie என்ற புத்தம்புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ரூ.64,990 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்திய ஆட்டோமொபைல் துறையானது எலக்ட்ரிக் வாகனங்களின் தேவையை உணர்ந்து தற்போது மாற்றத்தை சந்தித்து வருகிறது. எலக்ட்ரிக் வாகனங்கள் மக்களின் நம்பிக்கையை பெற்றிருப்பதால் தற்போது அனைத்து நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு புதிய தயாரிப்புகளை சந்தையில் களமிறக்கத்தொடங்கியுள்ளன.
கலிபோர்னியாவை சேர்ந்த Aeris கம்யூனிகேஷன்ஸ் மற்றும் BattRE நிறுவனங்களுக்கு இடையிலான புரிந்துணர்வின் அடிப்படையில் புதிய GPSie ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு கனெக்டட் ஸ்கூட்டராகவும், என்னற்ற அம்சங்கள் கொண்டதாகவும் வெளிவந்துள்ளது.
GPSie ஸ்கூட்டரில் 48V/24Ah லித்தியம் ஃபெரோ பாஸ்பேட் பேட்டரி இடம்பெற்றுள்ளது. இந்த பேட்டரியானது 2.5 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடுகிறது. ஒரு முழு சார்ஜ் மூலம் இந்த ஸ்கூட்டரில் 65 கிமீ பயணிக்க முடிகிறது. இந்த பேட்டரியின் ஆயுட்காலம் 2,000 சுழற்சிகள் (cycles) என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 250w ஹப் மோட்டார் பேட்டரியுடன் இணைக்கப்பட்டுள்ளது, இது மணிக்கு அதிகபட்சமாக 25 வேகத்தில் வாகனத்தை இயக்குகிறது.
அசத்தும் அம்சங்கள்:
இந்த புதிய ஸ்கூட்டரில் LED ஹெட்லைட், டிஜிட்டர் ஓடோமீட்டர், கீலெஸ் இக்னிஷன், USB சார்ஜர், ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங், டியூப்லெஸ் டயர்களுடன் கூடிய 10 இஞ்ச் வீல்கள், EBS வசதியுடன் கூடிய 220mm டிஸ்க் பிரேக் என அசத்தும் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
Connectivity:
இந்த ஸ்கூட்டரில் கனெக்டிவிட்டி வசதி இடம்பெற்றுள்ளது. இதற்கென பிரத்யேக சிம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜிபிஎஸ் ட்ராக்கிங், ஓட்டுநரின் டிரைவிங் முறைகள், Remote immobilisation, Speeding, crash reports, பாதுகாப்பு என அனைத்து வசதிகளும் பிரத்யேக மொபைல் செயலி மூலம் கிடைக்கிறது.
தமிழகத்திலும் ஷோரூம்:
தற்போது இந்த நிறுவனத்திற்கு தமிழகம், கர்நாடகா, தெலங்கானா, குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திரா உட்பட பல்வேறு மாநிலங்களில் 50க்கும் மேற்பட்ட டீலர்கள் உள்ளனர். டீலர்கள் மட்டுமல்லாது அமேசான் தளத்திலும் இந்த ஸ்கூட்டரை வாங்கிக்கொள்ள முடியும்.
BattRE GPSie மாடலின் விலை ரூ.64,990ஆக உள்ளது. இந்தியாவில் குறைந்த வேகம் கொண்ட பேட்டரி ஸ்கூட்டர்களில் இதுவே குறைந்த விலை கொண்டதாக அறியப்படுகிறது. இந்த ஸ்கூட்டரின் கனெக்டிவிட்டி வசதிகளுக்காக வாடிக்கையாளர்கள் மாதம் ஒன்றிற்கு 1,200 ரூபாய் செலவிட வேண்டும் என்பது கவனிக்கத்தக்கது.