https://d13m78zjix4z2t.cloudfront.net/aire.png

மதுரை விமான நிலையத்தில் விமான சேவைகள் தொடங்கியது!

by

61 நாட்களுக்கு பிறகு மதுரை விமான நிலையத்தில் 12 விமான சேவைகள் தொடங்கியது.

கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக இந்தியா முழுவதும் மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது இதனால் மதுரை விமான நிலையத்தில் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டது. தற்போது மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளித்ததன் அடிப்படையில் இன்று முதல் மதுரை விமான நிலையத்திலிருந்து சென்னை, பெங்களூர், டெல்லி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளுக்கு மதுரை விமான நிலையத்திலிருந்து விமான சேவைகள் தொடங்கியுள்ளது.

விமான டிக்கெட் விற்பனை அனைத்தும் இணையதளம் மூலமாகவே நடைபெற்று வருகிறது.மேலும் இன்று காலை முதல் விமானத்தில் பயணம் செய்வதற்காக பயணிகள் குறைந்த அளவு மதுரை விமான நிலையம் வந்த வண்ணம் உள்ளனர்.

மதுரை விமான நிலையம் வரும் பயணிகள் அனைவரின் பொருள்கள் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மேலும் பயணிகள் கை கழுவுவதற்காக தானியங்கி இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது மேலும் காலணிகள் மூலம் கிருமி பரவுவதற்கான வாய்ப்பு உள்ளதால் கிருமிநாசினி தெளிக்கப்பட்ட தரை விரிப்பில் காலணிகள் சுத்தம் செய்து பயணிகள் அனைவருக்கும் தர்மல் ஸ்கேனிங் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு மேலும் அனைத்து பயணிகளுக்கும் கையுறைகள் வழங்கப்பட்ட பின்பு மதுரை விமான நிலையத்தினுள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.மேலும் மத்திய தொழில் பாதுகாப்பு படையிரை பாதுகாத்துக்கொள்ள PPE கிட் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் முழு பாதுகாப்புடன் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பயணிகளின் வருகையை பொறுத்து விமானங்கள் இயக்கப்படும் என்று விமான நிலையங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது உள்ள விமான சேவைகள் மே 25 முதல் மே 30-ஆம் தேதி வரை எந்த ஒரு மாற்றம் இல்லை என்றும் மே 31ம் தேதிக்கு பிறகு விமானங்கள் அதிகரிப்பு குறித்து அறிவிக்கப்படும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மதுரை விமான நிலையம் உள்ளே உள்ள மருந்தகங்கள், உணவகங்கள் தவிர்த்து எந்த ஒரு கடைகளும் திறப்பதற்கான அனுமதி அளிக்கப்படவில்லை.