https://d13m78zjix4z2t.cloudfront.net/am_3.png

மருத்துவ நிபுணர்களோடு முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை!

by

ஊரடங்கை நீட்டிப்பதா அல்லது தளர்த்துவதா என்பது குறித்து மருத்துவ நிபுணர்களோடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்துகிறார்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த 4ம் கட்டமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு  வரும் 31ஆம் தேதியோடு முடிவடைய உள்ளது. இந்நிலையில் மருத்துவ நிபுணர்களோடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்துகிறார்.நாளை காலை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு காணொலி காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொள்கிறார். 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை மேற்கொள்ளும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா தடுப்பு நடவடிக்கையின் அடுத்தக்கப்பட்ட பணிகள் குறித்து அவர்களின் கருத்துகளை கேட்டறிய உள்ளார். 

இதற்கு முன்பு ஒவ்வொரு முறை ஊரடங்கு நீடிக்கப்படும் முன்னரும் மருத்துவ நிபுணர்கள் ஆலோசனையை முதல்வர் கேட்டறிந்துள்ளார். இந்நிலையில் நாளை முதல்வர் நடத்தும் ஆலோசனையும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.