https://d13m78zjix4z2t.cloudfront.net/tn_26.png

இந்தியாவில் இயல்பு நிலைக்கு திரும்பும் மின் தேவை!

by

ஊரடங்கால் முடங்கியிருந்த நிறுவனங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கியுள்ளதால் நாட்டின் மின் தேவை தற்போது இயல்பு நிலைக்கு திரும்பத் தொடங்கியுள்ளது. 

இந்தியவில் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு தொழில் நிறுவனங்கள் மற்றும் போக்குவரத்து சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் மின் தேவை வெகுவாக குறைந்திருந்தது. 

https://d13m78zjix4z2t.cloudfront.net/inline-images/TN-Power-.png

ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் மொத்த மின் தேவை 2,700-2,900 மில்லியன் யூனிட்டுகளாக இருந்தது. இம்மாதத்தில் மின் தேவை கடந்த 1 முதல் 20ம் தேதி வரை 3,600 மில்லியன் யூனிட்டுகளை தொட்டுள்ளது. இது கடந்த ஆண்டு மே மாதம் பதிவான தேவையை காட்டிலும் சில நூறு யூனிட்டுகளே குறைவு என அரசுக்கு சொந்தமான பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப் லிமிடெட் தெரிவித்துள்ளது. 

இந்த மின்சார தேவை திடீர் அதிகரிப்புக்கு காரணம் தொழில் நிறுவனங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கியுள்ளதும், வெப்பமான வானிலையுமே முக்கிய காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தற்போது ரயில் சேவையில் ஒரளவு செயல்பட்டு வருவதால் அதற்கு 500 மில்லியன் யூனிட்டுகள் தேவைப்படுகிறது. 

https://d13m78zjix4z2t.cloudfront.net/inline-images/ko_2.png

செயல்பாட்டுக்கு வரும் தொழில் நிறுவனங்களில் எண்ணிக்கையும் உயர்ந்து வருவதால் வரும் மாதங்களில் மின் தேவை முழுவதும் இயல்பு நிலைக்கு திரும்பும் எனவும் தெரிவித்துள்ளனர். கடந்த 40 நாள் ஊரடங்கு உத்தரவு, இந்தியாவில் 30% அளவுக்கு மின் தேவை குறைந்துள்ளதாக பிரான்ஸ் தலைநகர் பாரிஸை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சர்வதேச எரிசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் அரசுக்கு சொந்தமான சில எரிபொருள் நிறுவனங்கள் நிதி நெருக்கடியில் சிக்கித்தவிப்பதும் மின் தேவை குறைவுக்கு காரணம் என கூறப்படுகிறது. 

ஏனெனில் அந்நிறுவனம் தேவையான அளவு மின்சாராம் வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறது. கடந்த ஆண்டு மே மாதம் 183 ஜிகாவாட் என்ற புதிய உச்சத்தை எட்டிய மின் தேவை 168.74 ஜிகாவாட் ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் காலத்தில் தொழில் நிறுவனங்களில் இயக்கம் அதிகரிக்கும் பட்சத்தில் மீண்டும் மின் தேவை உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.