https://d13m78zjix4z2t.cloudfront.net/carrot_0.png

திருமழிசை சந்தையில் காய்கறிகள் டன் கணக்கில் வீணாகி வருவதாக வியாபாரிகள் கவலை!

by

சென்னை திருமழிசைக்கு வரும் காய்கறிகள், டன் கணக்கில் வீணாகி வருவதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். 

சென்னை கோயம்பேட்டில் செயல்பட்டு வந்த மொத்த காய்கறி அங்காடி, கொரோனா தொற்று காரணமாக திருமழிசைக்கு மாற்றப்பட்டது. அங்கு தினமும் 400 லாரிகளில் காய்கறிகள் வருகின்றன. அதேநேரம் 1500க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகளுக்கு இடம் ஒதுகிக் கொடுக்காததால், அவர்கள் மூலமாக நடைபெறும் விற்பனை பெருமளவு குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதிகமான காய்கறி வரத்து உள்ள நிலையில் காய்கறிகளை பாதுகாத்து வைக்க திருமழிசையில் போதிய இடம் இல்லை என்கிற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. 

இது போன்ற பல்வேறு காரணங்களால், தினமும் டன் கணக்கில் காய்கறிகள் வீணாகி வருவதாக வியாபாரிகள் கூறுகின்றனர். கேரட், வெள்ளை பூசணி, முள்ளங்கி உள்ளிட்ட காய்கறிகள், பொது வெளியில் கொட்டப்படுகின்றன. இதனால், பெரும் இழப்பு ஏற்பட்டு வருவதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். காய்கறிகள் வீணாவதை தடுக்கும் வகையில், மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லறை வியாபாரிகளுக்கு சென்னையில் இடம் ஒதுக்கித்தர வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்