https://d13m78zjix4z2t.cloudfront.net/vija_13.png

தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்களில் 12% பேருக்கு மட்டுமே நோய் அறிகுறி!

by

தமிழகத்தில் இதுவரை கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களில் 12 சதவீதம் பேருக்கு மட்டுமே நோய் அறிகுறிகள் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

 

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமைச் செயலகத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது கொரோனா ஒழிப்பில் தொடக்கம் முதலே தமிழகம் சரியான பாதையில் பயணித்து வருகிறது என தெரிவித்த அவர், இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் 4.21 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதனால் Best practice of TamilNadu என மத்திய அரசு நம்மை முன்னுதாரணமாக மற்ற மாநிலங்களுக்கு காட்டி பாராட்டி வருகிறது என அவர் தெரிவித்துள்ளார். 

 

தொடர்ந்து பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் 50% பேர் 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் என்று தெரிவித்தார். மேலும்  இதுவரை உயிரிழந்துள்ள 118 பேரில் 84% பேருக்கு கொரோனாவுடன் வேறு பல நோய்களும் இருந்தது என்றும் அதிலும் சர்க்கரை நோயாளிகள், ரத்தம் அழுத்தம் உள்ளவர்களே அதிகம் பேர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

https://d13m78zjix4z2t.cloudfront.net/inline-images/L.png

 

விமான போக்குவரத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் புதிய சவாலாக உள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மாநிலத்திற்கு வருவோர் மற்றும் இங்கிருந்து செல்வோருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது என விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.