https://d13m78zjix4z2t.cloudfront.net/ana%3B.png

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அனல் காற்று வீச வாய்ப்பு!

by

தமிழகத்தில் ஒருசில இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு அனல்காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மதுரை, திருச்சி, கரூர், ஈரோடு, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் திருத்தணியில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை உயர்ந்து அனல்காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்து, அனல்காற்று வீசும் எனவும், அடுத்த 2 நாட்களுக்கு காலை 11 மணியில் இருந்து பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள், திறந்த வெளியில் செல்வதை தவிர்க்குமாறும் வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது. 

வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.