https://d13m78zjix4z2t.cloudfront.net/karthi_3.png

நடிகர் கார்த்தியின் பிறந்தநாள் இன்று... சமூக வலைத்தளங்களில் வாழ்த்து கூறி வரும் ரசிகர்கள்!

by

தமிழ் திரையுலகில் பிரபல ஹீரோவான கார்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

நடிகர் சிவக்குமாரின் மகன், சூர்யாவின் சகோதரரர் என்று அறியப்பட்ட கார்த்தி, இயக்குநர், மணிரத்னத்தின் உதவி இயக்குநராக தனது வாழ்க்கையைத் தொடங்கி பின்னர் 2007ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற பருத்தி வீரன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். பின்னர் பல்வேறு திரைப்படங்கள் மூலம் பிரபலமான கார்த்தி தனது 43வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

முதல் படத்திலேயே ரிஸ்க்: 

தனது திரை வருகையை கிராமத்து கதைக்களத்தில் ஆரம்பித்த கார்த்திக்கு பருத்திவீரன் திரைப்படம் நல்ல அடித்தளத்தை அமைத்து கொடுத்தது. மெட்ராஸ் சிறைக்குப் செல்ல வேண்டும் என்பதை கனவாகக் கொண்ட ஒரு மோசமான, இளைஞனை மையமாகக் கொண்ட இந்த படத்தில், கார்த்தியின் அசைக்க முடியாத நடிப்பு அவருக்கு பிலிம்பேர் விருதைப் பெற்று தந்தது.

https://d13m78zjix4z2t.cloudfront.net/inline-images/ala_0.png

தொடர் வெற்றிகள்: 

பருத்தி வீரன் படத்திற்கு பின்னர் ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல சிறுத்தை என அடுத்தடுத்த வெற்றி படங்கள் மூலம் கார்த்தி தனது நடிப்புப் பாதையை செதுக்கினார். குறிப்பாக ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் 2 பாகத்திற்காக ரசிகர்கள் இன்று வரை கேட்டு வருகின்றனர். 

அதன் பின்னர் சில படங்கள் சறுக்கினாலும், மெட்ராஸ், கொம்பன், தீரன், கடைக்குட்டி சிங்கம் படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில்‘நல்ல நடிகன்’என்ற அந்தஸ்தை கார்த்தி பெற்றார். 

தாக்கத்தை ஏற்படுத்திய டில்லி: 

கார்த்தி நடிப்பில் கடைசியாக வெளிவந்த கைதி திரைப்படம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. மாநகரம்’ படம் மூலம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த, லோகேஷ் கனகராஜ் ’கைதி’யில் இன்னும் வலுவான இயக்குநராக பேசப்பட்டார். ஒரே இரவில் நடக்கும் கதையான இதில் டில்லி கதாபாத்திரம், கார்த்தியின் திரை அவதாரங்களில் முக்கியமான காதாப்பாத்திரமாக இடம்பெற்றுள்ளது. 

https://d13m78zjix4z2t.cloudfront.net/inline-images/kar-2.png

20 படங்கள் 20 இயக்குநர்கள்: 
 

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்ட கார்த்தி ஒரு முறை பணியாற்றிய இயக்குநருடன் மீண்டும் கூட்டணி வைத்ததில்லை. அவர் இதுவரை நடித்த 20 படங்களும் வெவ்வேறு இயக்குநர்களின் படைப்புகள் ஆகும். 

கார்த்தியின் நடிப்பில் அடுத்ததாக சுல்தான், பொன்னியின் செல்வன் திரைப்படங்கள் உருவாகி வருகிறது.