http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_Fe_2020__272274196147919.jpg

புத்தம் புது போன்

நன்றி குங்குமம் முத்தாரம்

ஸ்மார்ட்போன் சந்தையின் போக்கையே 2020-ம் வருடம் மாற்றப்போகிறது  என்று கேட்ஜெட்ஸ் விமர்சகர்கள் அடித்துச் சொல்கின்றனர். அவர்கள் சொல்வதைப் போலவே ஸ்மார்ட்போன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பெரு நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை வருடம் தொடங்கியதில் இருந்தே அறிமுகப்படுத்த ஆரம்பித்துவிட்டன. விலை, தரம், தொழில்நுட்பம் என அனைத்து வகையிலும் வித்தியாசம் காட்டியிருக்கின்றன நிறுவனங்கள். இந்தப் போட்டியில் ‘ஆப்பிள்’ நிறுவனமும் விரைவில் இணையப் போகிறது. ஆம்; ‘ஐபோன் 12’ என்ற புது  மாடலை ‘ஆப்பிள்’ வெளியிடப்போவதாக தகவல் கசிந்துள்ளது. இதற்கு முன் வெளியான அனைத்து வகையான ஐபோன் மாடல்களையும் தூக்கிச் சாப்பிட்டுவிடும் போலிருக்கிறது என்று இணையவாசிகள் புகழாரம் சூட்டி வருகின்றனர்.  

அதற்கு முன் ஐபோன் 12 சீரிஸில் உள்ள சில சுவாரஸ்யமான விஷயங்களைப் பார்ப்போம். இது கேட்ஜெட்ஸ் வல்லுநர்களின் அனு மானம் மட்டுமே. கையடக்கமாக, அதே நேரத்தில் ஸ்டைலிஷலாக 5.4 இன்ச் டிஸ்பிளேவில் ஒரு மாடல்,  பெரிய டிஸ்பிளேவை விரும்புபவர்களுக்காக 6.1 இன்ச்சில் இரண்டு மாடல்கள் மற்றும் 6.7 இன்ச் OLED டிஸ்பிளேவில் இன்னொரு மாடல் என நான்கு விதமான மாடல்கள். முன்பு வெளியான ஐபோன்களைவிட சிறந்த, பெரிய டிஸ்பிளேக்களைக் கொடுப்பது இதன் முக்கிய நோக்கம். அடுத்த தலைமுறையை மனதில் கொண்டு 5ஜி நெட்வொர்க்கிற்கு உகந்த தொழில்நுட்பம், தவிர, கேமராவிலும் அதிரடியான மாற்றங்களைச் செய்யவிருக்கிறது ‘ஆப்பிள்’. அது இதுவரை வெளியான ஸ்மார்ட்போன்களில் உள்ள கேமராக்களைவிட புதுமையாக நவீனமாக இருக்கும். இந்த மாடல்கள் வெளியாகும்போது ஐபோனின் பழைய மாடல்களின் விலை கணிசமாகக் குறையும்.