https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/14/original/master_audio1xx.jpg

மாஸ்டர் படத்துக்காக விஜய் பாடிய பாடல் வெளியானது!

by

பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது. மாஸ்டர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு இசை - அனிருத். ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ள இப்படத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா போன்றோர் நடிக்கிறார்கள். 

இந்நிலையில் மாஸ்டர் படத்தில் விஜய் பாடிய பாடல் இன்று வெளியாகியுள்ளது. இப்பாடலை அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!