https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/2/7/original/ramayanam.jpg

ராமாயண கால ஓவியங்கள், பஜனைப் பாடல்களுடன் வருகிறது புதிய ரயில்: ரயில்வே அறிவிப்பு

by

புது தில்லி: ராமாயணத்தை விளக்கும் ஓவியங்கள் மற்றும் பஜனைப் பாடல்களுடன் புதிய ரயிலை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்த உள்ளது.

ராமாயண விரைவு ரயிலின் அடுத்த பரிமாணமாக இந்த ரயில் அமையும் என்றும், இது ராமாயணத்துடன் தொடர்புடைய இடங்களுக்கு பக்தர்களைக் கொண்டு செல்வதோடு, ராமாயண காலத்தை உணரவும் செய்யும் என்றும் அதிகாரிகள் கூறுகிறார்கள்.

இந்த ரயில் மார்ச் 10ம் தேதிக்குப் பிறகு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ரயில்வே வாரிய நிர்வாகி வி.கே. யாதவ் கூறியுள்ளார்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்களை ராமாயணத்துடன் தொடர்புடைய தலங்களுக்குக் கொண்டு செல்லும் பணியை செய்து வரும் இந்த ரயில் நவம்பர் 14ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த ரயில் நந்திகிராம், ஜனக்புரி, வாராணசி, பிரயாக், அயோத்யா, ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் வகையில் இயக்கப்பட்டு வருகிறது.
 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!