http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_Fe_2020__198238551616669.jpg

2015 - 2018 வரை குரூப்4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி வழங்கக் கோரிய வழக்கில் டிஎன்பிஎஸ்சி செயலருக்கு நோட்டீஸ்

மதுரை : 2015 - 2018 வரை குரூப்4 தேர்வில் வெற்றி பெற்றவர்களின் பணியிடங்களை நிரப்பும் வரை 2019 ஜூலை 14ல் நடத்தப்பட்ட தேர்வில் வெற்றி பெற்றவர்களை நியமிக்க தடை கோரி வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலர், தமிழக வருவாய்துறை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.