இலங்கை இராணுவ தளபதி தொடர்பில் அமெரிக்காவின் அதிரடி அறிவிப்பு
by Vethu, Vethuஇலங்கை இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினர் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை திணைக்களம் சற்று முன்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
போர்க்குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டமை தொடர்பில் கிடைத்த நம்பிக்கையான ஆதாரங்களுக்கு அமைய இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஷவேந்திர சில்வா மற்றும் குடும்பத்தினரும் அமெரிக்காவிற்குள் நுழைய தகுதியற்றவர்கள் என அமெரிக்க வெளியுறவு செயலாளர் Mike Pompeo தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனித உரிமை அமைப்புகளால் வெளியிடப்பட்ட ஆவணங்களின்படி ஷவேந்திர சில்வா மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க வெளியுறவு திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் முழு விபரம் வருமாறு,