http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_Fe_2020__205105006694794.jpg

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்கி பெரியாரின் கனவை ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார்

பெரம்பலூர்: உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கி பெரியாரின் கனவை திமுக தலைவர் ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார். பெரம்பலூரில் முன்னாள் அமைச்சர் ராசா பேசினார். பெரம்பலூர் பாலக்கரை அருகே உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட

செயலாளர் குன்னம் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.
மாவட்ட மகளிரணி செயலாளர் மகாதேவி ஜெயபால் வரவேற்றார். மாநில நிர்வாகிகள் சுபா சந்திரசேகரன், துரைசாமி, பெருநற்கிள்ளி, பெரியசாமி, டாக்டர் வல்லபன், தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், மாவட்ட அவைத் தலைவர் நடராஜன், மாவட்ட துணைச் செயலாளர் பாஸ்கர், பொருளாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, அண்ணாதுரை, நல்லதம்பி, மதியழகன், ஜெகதீசன், பாடாலூர் மதியழகன், மருவத்தூர் ராஜேந்திரன், நகர செயலாளர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி பாரளுமன்றத் தொகுதி எம்பியுமான ராசா கலந்துகொண்டு பேசியதாவது: பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை வலியுறுத்தியது பெரியரின் கொள்கை.

பெரியாரின் கொள்கையை, கனவை நனவாக்க திமுக தலைவர் ஸ்டாலின், நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கி பெரியாரின் கனவை நிறைவேற்றியுள்ளார். அடுத்து வரக்கூடிய

நகரமைப்புத் தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும் திமுகவினர் முழு மூச்சுடன் களமிறங்கி தேர்தல் பணியாற்றினால் பெரியாரின், அண்ணாவின், கலைஞரின் கொள்கைகளை நிறைவேற்றக்கூடிய தலைவர் ஸ்டாலினை முதல்வராக

ஆக்கமுடியும். அதற்கு மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணியினரின் பங்கு மகத்தானதாக இருக்க வேண்டும். அதற்கான பணிகளை அவர்கள் இப்போதிருந்தே தொடங்க வேண்டும் எனக் கேட்டுக்கொ ண்டார். இதனைத்தொடர்ந்து மகளிரணி

மற்றும் மகளிர் தொண்டரணி புதிய உறுப்பினர் சேர்க்கைக் கான படிவங்களை அதன் மாவட்ட அமைப்பாளர்கள் மகாதேவி ஜெயபால் மற்றும் புஷ்பவள்ளி ராஜேந்திரன் ஆகியோரிடம் வழங்கினார்.

கூட்டத்தில், நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பாகப் போட்டி யிட்டு வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக் களை பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்வது. பெரம்பலூர் மாவட்டத்தில் திமுக சார்பாக அதிகப்படியான மகளிர்

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்த ராசாவுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வது. திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்பி உத்தரவின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் அதிகப்படியான மகளிரை திமுக மகளிரணியில்

உறுப்பினராகச் சேர்த்து திமுகவை வலுப்படுத்துவது என தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் பொதுக்குழு உறுப்பினர்கள் மாவட்ட பிரதிநிதிகள், அனைத்து அணியின் மாவட்ட நிர்வாகிகள், பேரூர் செயலாளர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், ஊராட்சி செயலர்கள் பலரும் கலந்து கொண்டனர். மகளிர் தொண்டரணி மாவட்ட அமைப்பாளர் புஷ்பவல்லி ராஜே ந்திரன் நன்றி கூறினார்.