http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_Fe_2020__455181300640107.jpg

விழியிலே மலர்ந்தது... உயிரிலே கலந்தது...

‘‘அட... வருஷத்துக்கு ஒருமுறைதான் இந்த காதலர் தினம் வருது... அட... உனக்கு எனக்கு மட்டும்தான் அது வருஷம் பூரா வருது...’’
- இப்படி ஒரு திரைப்பட பாடலை கேட்டிருக்கிறீர்களா? அதுதான் காதலின் ஸ்பெஷல். உண்மையான காதலுக்கு நாள், கிழமை எல்லாம் கிடையாதுங்க... அன்றாட வாழ்க்கையில் பார்க், பீச், கடற்கரை என பல இடங்களில் ஏராளமான

காதலர்களை பார்க்கிறோம். தினந்தோறும் திரும்பும் திசையெல்லாம் காதல் பரவிக் கொண்டேதான் இருக்கிறது. பெற்றோர், நண்பன், பிடித்த பொருள், உணவு, புத்தகம் - இப்படி ஒவ்வொன்றையும் கூட காதலிக்கலாம். உண்மையான, ஆழமான

அன்புதாங்க காதல். கரெக்டா?

சரி... எதுக்கு இன்று... அதாவது, பிப்ரவரி 14ம் தேதியை, ‘காதலர் தினம்’ என கொண்டாடுறாங்க தெரியுமா? காரணம் இருக்கு...!
கி.பி. 3ம் நூற்றாண்டுக்கு போகலாமா? ரோமானிய பேரரசை மன்னர் 2ம் கிளாடியஸ், ஆட்சி செய்து வந்தார். இவரது ‘டார்ச்சர்’ தாங்காமல், படை வீரர்கள் பலர் சொல்லாமல் கொள்ளாமல் ஓடி விட்டனர். அரண்மனையில் மற்ற வேலைகளுக்கு

ஆர்வமாக வருபவர்கள் படையில் சேர்வது என்றால், ‘வேண்டாம்.. வேற ஆளப்பாருங்க’ என்று சொல்லத் தொடங்கி விட்டனர். ‘என்னடா இது.. ரோமானிய பேரரசுக்கு வந்த சோதனை’ என்று எண்ணிய 2ம் கிளாடியஸ், உடனே வெறித்தனமா ஒரு உத்தரவு போட்டார் பாருங்க... ‘‘ரோமானிய நாட்டில் யாரும் கல்யாணமே செய்யக்கூடாது. மீறினால் சிறை தண்டனை விதிக்கப்படும்’’ என்று? மக்கள் மிரண்டு போனாங்க...! இதுகுறித்த காரணம் கேட்டபோது, ‘‘கல்யாணம் பண்றதாலதானே படை வீரர்களா வர மாட்டேங்குறீங்க..’’ - என்று விளக்கம் கொடுத்தார்.

இது பாதிரியார் வாலன்டைனுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. மன்னர் உத்தரவை மீறி, பலருக்கு ரகசிய திருமணம் செய்து வைத்தார். தகவலறிந்து கடுப்பான கிளாடியஸ், உடனடியாக பாதிரியாரை பாதாள சிறையில் தள்ளி, மரண தண்டனை

விதித்தார். வாலன்டைன் சிறையில் இருந்தபோது, அஸ்டோரியஸ் என்ற சிறைத்தலைவனின் கண் தெரியாத மகளை சந்தித்தார். வழக்கம்போல, வாலன்டைன் - அஸ்டோரியஸ்க்குள், அந்த சந்திப்பு காதலை வளர்த்தது. மன்னரின் எதிர்ப்பையும் மீறி இந்த ேஜாடியின் காதல் தொடர்ந்தது. இதையடுத்து அஸ்டோரியஸ் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டார். சிறைப்படுத்தப்பட்டது இருவரையும் மனதளவில் பாதித்தது. மரண தண்டனைக்கான நாள் நெருங்கியது. கிபி 270, பிப்ரவரி 14ம் தேதி கல்லாலே அடிக்கப்பட்டு, தலை துண்டிக்கப்பட்டு வாலன்டைன் கொல்லப்பட்டார். வாலன்டைன் இறப்பு தினமே ஒவ்வொரு பிப்ரவரி மாதமும் காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

வாழ்த்து அட்டையும்...வாட்ஸப் வாழ்த்தும்...!
வாலன்டைனுக்கு அஸ்டோரியஸ் எழுதிய முதல் காதல் கடிதம் உலகப்புகழ் பெற்றது. நீங்களா யோசிச்சு கவிதை மழையை பொழிஞ்சு எழுதி தள்ளலாம் (பிடிக்காமல் போனால் நாங்கள் பொறுப்பல்ல). இல்லை.. கடையில போய் கார்டு வாங்கி,

ஒரு ரோஜாவை மேல வச்சி, உங்க லவ்வருக்கு தரலாம். இல்லை... அவங்க பேரை குறிப்பிட்டு, கால மாற்றத்துக்கு தகுந்த மாதிரி வாட்ஸப் ஸ்டேட்டஸ் வைக்கலாம். அதெல்லாம் உங்க இஷ்டம்பா...!

அன்பே... அன்பே....உனக்கும் நிறமுண்டு...
இன்று காதலர் தினம். டிரஸ்சை பார்த்து போடுங்க... நீங்க போடுற ‘டிரெஸ் கோடை’ வச்சு, யார், யார் என்ன மனநிலையில் இருக்கிறாங்க என்பதை கணிக்கிறாங்க...

சிவப்பு    :    யாரும் நெருங்கிடாதீங்க... எனக்கு ஏற்கனவே ஒரு ஆள் இருக்கிறது.
மஞ்சள்    :    இப்பத்தான் என் ஆளு என்னை வெட்டி விட்டுருக்கு...
வெள்ளை    :    ம்ம்.. ஓகே... ஒரு ஆளுக்காக வெயிட்ட்ட்டிங்.
நீலம்    :    ஹேய்... யாராவது லவ் பண்ணுங்கப்பா... ப்ளீஸ்.
பச்சை    :    இன்னைக்கு என் ஆளு லவ்வை சொல்லப்போறா...!
ஆரஞ்ச்    :    காதலை சொல்லப்போறேன். ஓகேயாகுமான்னு தெரியலை.
பிங்க்    :    இப்பத்தான் லவ்வை சொன்னா... ஹேப்பி அண்ணாச்சி.
கருப்பு    :    லவ் பெயிலியர் ஆளு... அல்லது காதல் கசக்குதய்யா பார்ட்டி.
கிரே    :    ‘சிங்கிள் ஏரியா... கிட்ட வராதே...’.
- ஓகேதானே... எதுக்கு வம்பு... எல்லா கலரும் வர்ற மாதிரி டிரஸ் போடப்போறேன் என்கிறீர்களா? அதுவும் சரிதான்...!

ரோஜா... ரோஜா...ரோஜா.... ரோஜா...
காதலர் தின மலர் என்றாலே ரோஜாதான்.. அதுவும் ஓசூர் ரோஸ் ரொம்ப பேமஸ். காதலர் தினத்துக்காகவே பல வண்ண மலர்கள் இங்கு சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விளைவிக்கப்படுகின்றன. இங்கு பேர்னியர், கார்வெட், டிராபிக்கல்,

தாஜ்மகால், ரோடோஸ், அவலஞ்சர், அமேசான் நோப்ளாஸ், கோல்டு ஸ்டிரைக் உள்ளிட்ட 30 வகையான ரோஜா மலர்கள் விளைவிக்கப்படுகின்றன. புத்தாண்டு, கிறிஸ்துமஸ், காதலர் தினத்தில் ஏராளமான ரோஜாக்கள் இப்பகுதியில் இருந்து

சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அதிகளவு ஏற்றுமதியாகின்றன. கடந்த சில ஆண்டுகளாக 1 கோடி மலர்கள் வரை ஏற்றுமதியாகி உள்ளது. இம்முறை சுமார் 2 கோடி வரை விற்பனையாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

‘தினந்தினம் உன் முகம் நினைவில் மலருது...’

காதலர் தினம் பிப். 14க்கு முன்பே ஆரம்பித்து விடும். அது மொட்டு விட்டு, படிப்படியாக 14ம் தேதி மலர்ந்து விடும். ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு ஸ்பெஷல் உண்டு. (அடுத்த வருடமாவது பாலோ பண்ணுங்க...).
பிப். 7    :    ரோஜா தினம் - இன்று வேறு எந்த பொருளையும் தர வேண்டாம். ரோசா மட்டும் போதும்.
பிப். 8    :    காதலை சொல்லும் தினம் - நம்ம லவ்வர்கிட்டே திருப்பி எதுக்கு லவ்வை சொல்லணும்னு கேட்காதீங்க... மனைவிக்கிட்டே கூட டெய்லி, ‘ஐ லவ் யூ’ சொல்லலாம்.
பிப். 9    :    சாக்லேட் தினம். லவ்வருக்கு பிடித்த பிளேவர் சாக்லேட் வாங்கிட்டு போங்க... கசப்பை தவிர்க்கலாம்.
பிப். 10    :    டெடி தினம் : டெடி பியர் பொம்மையை பிடிக்காதவர்கள் இருக்க முடியுமா என்ன? கொடுத்திடுங்க...!
பிப். 11    :    சத்திய தினம் : ஏதாவது வாங்கித்தர்றேன்னு இழுத்தடிச்சீங்களா? அதை உடனே பிராமிஸ் பண்ணியபடி வாங்கி கொடுத்திருங்க...
பிப். 12    :    அணைத்தல் தினம் : ஐய்யய்யோ... இதெல்லாம் சொல்லித்தரணுமா? அன்பை பரிமாறும் மற்றொரு விஷயம் அணைப்பு தானே.
பிப். 13    :    முத்த தினம் : நீங்களா பார்த்து முடிவெடுத்துக்குங்க... அவ்வளவுதான்...!