
நிதி நெருக்கடி இருந்தாலும், வளர்ச்சியை நோக்கி தமிழக பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது : நிதித்துறை செயலாளர் பேட்டி
சென்னை : மத்திய அரசின் வரி வருவாய் ஒதுக்கீடு ரூ.7,586 கோடி குறைந்துள்ளது என்று தமிழக நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். வரும் ஆண்டில் நிதி பற்றாக்குறை சாதகமான நிலை அடையும் என்று குறிப்பிட்ட அவர், கூடுதலாக 35,000 பேருக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்க திட்டம் உள்ளது என்றும் பட்ஜெட்டில் கடந்த ஆண்டை விட 26% கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிதி நெருக்கடி இருந்தாலும், வளர்ச்சியை நோக்கி தமிழக பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நாட்டில் அதிக நிதி வழங்குவது தமிழகம்தான் என்றும் குறிப்பிட்டார்.