https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/14/original/cm.jpg
தமிழக சட்டப்பேரவை

பிப்ரவரி 20ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர்: பேரவைத் தலைவர் அறிவிப்பு

by

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற பிப்ரவரி 20ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2020-21ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பேரவையில் இன்று தாக்கல் செய்து உரையாற்றினார். அவர் தாக்கல் செய்த 10ஆவது பட்ஜெட் இதுவாகும். இதன் மூலமாக தமிழக பட்ஜெட்டை அதிகமுறை தாக்கல் செய்தவர் என்ற பெருமையை ஓ. பன்னீர்செல்வம் பெற்றுள்ளார். 

இந்நிலையில் பட்ஜெட் உரைக்குப் பின்னர், சபாநாயகர் தனபால் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் பிப்ரவரி 20ஆம் தேதி வரை தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!