https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/14/original/Justice_R_Banumathi.jpg

நிர்பயா வழக்கு விசாரணையின் போது மயங்கி விழுந்த நீதிபதி பானுமதி

by

புது தில்லி: நிர்பயா குற்றவாளிகளைத் தனித்தனியாக தூக்கிலிடுவது தொடர்பான வழக்கு விசாரணையின் போது உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர். பானுமதி திடீரென மயங்கி விழுந்தார்.

நிர்பயா குற்றவாளிகளைத் தனித்தனியாக தூக்கிலிடுவது தொடர்பாக மத்திய அரசு தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

மத்திய அரசின் மனு மீது, முக்கிய உத்தரவுகளை நீதிபதி பானுமதி பிறப்பித்துக் கொண்டிருந்தார். திடீரென அவர் மயக்கமடைந்து கீழே விழுந்தார்.

உடனடியாக அவரை உடன் இருந்த நீதிபதிகள் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவர் குழு முதலுதவி சிகிச்சை அளித்ததை அடுத்து, அவருக்கு மயக்கம்தெளிந்தது.
 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!