https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/14/original/ops.jpg

கிறிஸ்தவ தேவாலயங்கள், மசூதிகளுக்கான பராமரிப்பு நிதி அதிகரிப்பு

by

தமிழக பட்ஜெட்டில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மசூதிகளுக்கான பராமரிப்பு நிதி அதிகரிக்கப்பட்டுள்ளது. 

2020-21ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பேரவையில் இன்று தாக்கல் செய்து உரையாற்றினார். அவர் தாக்கல் செய்யும் 10ஆவது பட்ஜெட் இதுவாகும். இதன் மூலமாக தமிழக பட்ஜெட்டை அதிகமுறை தாக்கல் செய்தவர் என்ற பெருமையை ஓ. பன்னீர்செல்வம் பெற்றுள்ளார்.

இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்ட நிலையில், கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மசூதிகளுக்கான பராமரிப்பு நிதி அதிகரிக்கப்பட்டுள்ளது. 

கிறிஸ்துவ தேவாலயங்களின் பழுதுபார்ப்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக வழங்கப்படும் நிதியுதவி ரூ.1 கோடியில் இருந்து ரூ. 5 கோடி உயர்த்தப்படும் என்றும் மசூதிகளின் பராமரிப்புக்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் நிதியுதவி ரூ.60 லட்சத்தில் இருந்து ரூ.5 கோடியாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் நிதியமைச்சர்  அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அறிவித்துள்ளார். 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!