பிரதேசங்களில் சிலவற்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் 5 பேர் கைது
சில பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் ஹெரோயின் உள்ளிட்ட போதைபொருள் மற்றும் மதுபானங்களுடன் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நிட்டம்புவ, மல்வத்த சந்தியில் மற்றும் பஸ் தரிப்பிடத்தில் பிரதேச ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் 02 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயினுடனும் மற்றும் 03 கிராம் 500 மில்லிகிராம் ஹெரோயினுடனும் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்கள் நிட்டம்புவ பிரதேசத்தை சேர்ந்த 42 மற்றும் 26 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, முல்லேரியாவ கொடவுட பிரதேசத்தில் ஒரு கிலோ கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, எலென் எகொட களப்பு பிரதேசத்தில் 45 ட்ரேம்ஸ் சட்டவிரோத மதுபானங்கள் தொகையொன்றுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.