http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_Fe_2020__718212306499482.jpg

ரூ.3831 கோடி செலவில் தமிழ்நாடு நீடித்த நகர்ப்புர வளர்ச்சித் திட்டம் : பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னை : 2020- 21ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சராக 10வது முறையாக தமிழக பட்ஜெட்டை  ஓ பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். அப்போது  அவர் உரையில் கூறிய சிறப்பு அறிவிப்புகள் குறிப்புகளாக பின்வருமாறு...

*ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.5654.25 கோடி நிதி ஒதுக்கீடு

*நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.5,306.95 கோடி நிதி ஒதுக்கீடு

*தமிழ்நாடு கிராமப்புற புத்தாக்க திட்டத்திற்கு ரூ.918 கோடி ஒதுக்கீடு

*நகராட்சி நிர்வாகம் சார்பில் கடன் பத்திரங்கள் வெளியிட்டு நிதி திரட்டப்படும்

*ரூ.3831 கோடி செலவில் தமிழ்நாடு நீடித்த நகர்ப்புர வளர்ச்சித் திட்டம்

*தமிழ்நாடு நீடித்த நகர்ப்புர வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஈரோடு, வேலூர், ஓசூர் மாதிரி நகரங்களாக தேர்வு

*நகராட்சி, மாநகராட்சிகளில் பாதாளச்சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற ரூ.406 கோடி ஒதுக்கீடு