https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/14/original/tnassembly.jpg

விபத்துகளில் உயிரிழந்தவர்களுக்கான இழப்பீட்டுத் தொகை அதிகரிப்பு: பட்ஜெட்டில் தகவல்

by

2020 - 21ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். 

அதில், முக்கிய அறிவிப்பாக இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்துடன் (எல்.ஐ.சி.) இணைந்து வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள அனைத்துக் குடும்பங்களும் பயனடையும் வகையில் ‘புரட்சித்தலைவி அம்மா விரிவான விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்திற்கான’ நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார். 

அதன்படி, இயற்கை மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடுத் தொகை ரூ. 2 லட்சமாக உயர்த்தப்படும் என்றும் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு இழப்பீட்டுத் தொகை ரூ. 4 லட்சமாக உயர்த்தப்படும். என்றும் விபத்தினால் நிரந்தர ஊனமுற்றோருக்கு ரூ.2 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். 

2020-21-ம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தில் இத்திட்டத்திற்காக ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!