https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/1/10/original/ops.jpg
ஓ.பன்னீர்செல்வம்

வி.ஏ.ஓ.க்களுக்கு சிறப்பு அதிகாரம்: தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு

by

பட்டா மாறுதல் பணியை விரைவுபடுத்தும் நோக்கில் நில அளவைப் பணிகளை மேற்கொள்ள கிராம நிர்வாக அலுவலர்(வி.ஏ.ஓ)-களுக்கு சிறப்பு அதிகாரம் வழங்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

2020 - 21ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்யும் 10ஆவது பட்ஜெட் இதுவாகும். பட்ஜெட்டில் ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்த அறிவிப்பும், பல்வேறு மக்கள் நலத் திட்டங்களும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 

இதில், கிராம நிர்வாக அலுவலர்(வி.ஏ.ஓ)-களுக்கு சிறப்பு அதிகாரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பட்டா மாறுதல் பணியை விரைவுபடுத்தும் நோக்கில் நில அளவைப் பணிகளை மேற்கொள்ள வி.ஏ.ஓக்களுக்கு சிறப்பு அதிகாரம் வழங்கப்படும் என ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!