பாலூட்டும் அறை திறப்பு!
by யாழவன்கிளிநொச்சி – கரைச்சி பிரதேச சபையால் பொதுச்சந்தை வளாகத்தில் அமைக்கப்பட்ட தாய்ப்பாலூட்டும் அறை, இன்று (14) மாவட்டச் செயலாளரால் திறந்து வைக்கப்பட்டது.
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட கிளிநொச்சி பஸ் நிலையம் மற்றும் பொதுச்சந்தை ஆகியவற்றின் பல்வேறு தேவைகளுக்காக வரும் பாலூட்டும் தாய்மார்களின் நன்மை கருதி கரைச்சி பிரதேச சபையால் இந்த தாய்ப்பாலூட்டும் அறை நிர்மாணிக்கப்பட்டது.