அதிவேக நெடுஞ்சாலை பணிகளில் ஈடுபட்ட சீனப் பிரஜை கராப்பிட்டிய வைத்தியசாலையில்
by Steephen, Benatமாத்தறை - ஹம்பாந்தோட்டை அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்த சீனப் பிரஜை ஒருவர் கொரோனா என்ற COVID 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சந்தேகத்தின் பேரில் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சீனப் பிரஜை காரப்பிட்டிய வைத்தியசாலையின் இலக்கம் 36 விசேட நோயாளர் விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விடுதியில் தற்போது COVID 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
சீனப் பிரஜைக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை பரிசோதனை செய்த பின்னர் தேவையேற்பட்டால் ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு மாற்றப்படுவார் என கராப்பிட்டிய வைத்தியசாலையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சீனப் பிரஜை சூரியவெவ நவதகஸ்வெவ பிரதேசத்தில் நெடுஞ்சாலை நிர்மாணிப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளதுடன் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதன் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.