சுற்றுலா மேம்பாடு திட்டத்திற்கு ரூ.90 கோடி ஒதுக்கீடு,மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக ரூ.667 கோடி ஒதுக்கீடு
சென்னை : 2020- 21ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சராக 10வது முறையாக தமிழக பட்ஜெட்டை ஓ பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். அப்போது அவர் உரையில் கூறிய சிறப்பு அறிவிப்புகள் குறிப்புகளாக பின்வருமாறு...
தமிழ்நாட்டின் மாநில குடும்பத் தரவு திட்டத்தை செயல்படுத்த ரூ.47.50 கோடி ஒதுக்கீடு
*சுற்றுலா மேம்பாடு திட்டத்திற்கு ரூ.90 கோடி ஒதுக்கீடு
*சுற்றுலா ஊக்குவித்தல் திட்டத்திற்கு 295 சுற்றுலாத்தளங்கள் மேம்படுத்தப்படும்
*கோவில்களுக்கு சொந்தமான 7233 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன
*அரசு ஊழியர்களுக்கு சென்னை தாண்டர் நகரில் ரூ.76 கோடியில் புதிய அடுக்குமாடி குடியிருப்பு
*மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக ரூ.667 கோடி ஒதுக்கீடு
*இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறைக்கு ரூ.218 கோடி ஒதுக்கீடு