http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_Fe_2020__781933009624482.jpg

சிறைக்கைதிகளின் ஊதியத்தில் 30 % மட்டுமே பிடிக்கப்படும் : பட்ஜெட்டில் சட்டம் - ஒழுங்கு, சிறைத்துறை தொடர்பான முக்கிய அறிவிப்புகள்

சென்னை : 2020- 21ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சராக 10வது முறையாக தமிழக பட்ஜெட்டை  ஓ பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். அப்போது  அவர் உரையில் கூறிய சிறப்பு அறிவிப்புகள் குறிப்புகளாக பின்வருமாறு...

*போதுமான காவலர்கள் இருப்பதை உறுதி செய்ய தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. மொத்தம் 1.13 லட்சம் காவலர்கள் பணியில் உள்ளனர்.

*காவல்துறைக்கு 8876.57 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

*346 தீயணைப்பு மையங்கள் தற்போது உள்ளன. இதற்காக 405.68 கோடி ரூபாய் ஒதுக்கீடு

*சிறைக்கைதிகளின் ஊதியத்தில் 30 % மட்டுமே பிடிக்கப்படும்.

*தமிழகத்தில் உள்ள மத்திய சிறைச்சாலைகளில் மேலும் 6 பெட்ரோல் நிலையங்கள்

*329.74 கோடி ரூபாய் சிறைத்துறைக்காக ஒதுக்கீடு.