http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_Fe_2020__122585475444794.jpg

அத்திக்கடவு அவினாசி திட்டம், காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம், பருவ கால மாற்றத் தழுவல் திட்டம் : நீர்ப்பாசனத் துறையில் முக்கிய அறிவிப்புகள்

சென்னை : 2020- 21ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சராக 10வது முறையாக தமிழக பட்ஜெட்டை  ஓ பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். அப்போது  அவர் உரையில் கூறிய சிறப்பு அறிவிப்புகள் குறிப்புகளாக பின்வருமாறு...

*4,825 பணிகள், குடிமராமத்துப் பணிகள் திட்டத்தின் கிழ் 902.35 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

*அத்திக்கடவு அவினாசி திட்டம், காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்பட உள்ளன். இவற்றுகாக 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

*கூவம், பக்கிங்ஹாம் கால்வாய் திட்டம் செயல்படுத்தப்படும். குறிப்பிடத்தக்க ஏரிகள் மீட்டெடுக்கப்படும்.

*நீர் பாசனத்திற்காக 6,991 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

*1364 நீர்பாசனப் பணிகள் ரூ.500 கோடி செலவில் பொதுப்பணித்துறையால் மேற்கொள்ளப்படும்

*காவிரி வடிநில பகுதிகளில் உள்ள 281 கால்வாய்கள் தூர்வார ரூ.60.95 கோடி நிதி ஒதுக்கீடு

*ரூ.67 கோடி செலவில் காவேரி வடிநிலப்பகுதிகளில் 392 தூர்வாறும் பணிகள் நடைபெறும்

*காவிரி பாசனப்பகுதியில் ரூ.1560 கோடி செலவில் பருவ கால மாற்றத் தழுவல் திட்டம்

*மேட்டூர் அணை உபரி நீரை சேலம் மாவட்டத்திற்கு பயன்படுத்தும் சாரபங்கா நீரேற்றுப் பாசன திட்டத்திற்கு ரூ.350 கோடி ஒதுக்கீடு

*ரூ.610 கோடி செலவில் 37 அணைகள் புனரமைப்பு செய்யப்படும். இந்த திட்டத்திற்கு ரூ.220 கோடி ஒதுக்கீடு

*ரூ.2962 கோடி செலவில் விவசாய நவீனமயமாக்கல் திட்டம் செயல்படுத்தப்படும்

*906 குளங்கள் மற்றும் 183 அணைக்கட்டு பகுதிகளை சீரமைக்க ரூ.583 கோடி ஒதுக்கீடு

*அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கு வரும் நிதி ஆண்டில் ரூ.500 கோடி ஒதுக்கீடு

*ரூ.700 கோடியில் காவேரி முதல் தெற்கு வெள்ளாறு வரையிலான இணைப்பு கால்வாய் திட்டம் செயல்படுத்தப்படும்

*புதிய குளங்களை உருவாக்குதல் மற்றும் பாசன வாய்க்கால்களை அமைக்க ரூ.655 கோடி ஒதுக்கீடு

*நீர்ப்பாசனத்துறைக்கு 6991 கோடி ரூபாய் ஒதுக்கீடு