தமிழக பட்ஜெட்டில் இடம்பெற்ற கால்நடைத்துறை, பால்வளம் தொடர்பான அறிவிப்புகள்
சென்னை : 2020- 21ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சராக 10வது முறையாக தமிழக பட்ஜெட்டை ஓ பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். அப்போது அவர் உரையில் கூறிய சிறப்பு அறிவிப்புகள் குறிப்புகளாக பின்வருமாறு...
*விலையில்லா கறவைப் பசுக்கள், வெள்ளாடுகள், கோழி வழங்கும் திட்டம், தீவன அபிவிருத்தி திட்டம் ஆகியவை வெற்றி பெற்றிருக்கின்றன.
*நடமாடும் கால்நடை மருத்துவப் பிரிவுகள் மூலம் விவசாயிகளின் இடத்திலேயே கால்நடை மருத்துவ சேவையை அரசு வழங்கும்.,
*சேலம் தலைவாசலில், கால்நடை அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தில், நாட்டு மாடுகள் குறித்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும்.
*சேலம் தலைவாசலில், கால்நடை பூங்காவுக்கு ரூ.199 கோடி ஒதுக்கீடு
*விவசாயிகள் மற்றும் நுகர்வோர்களுக்குப் பயனளிக்கக்கூடிய வகையில், ஆவின் நிறுவனத்தை வலுப்படுத்துவதற்காக, கூடுதலாக ஆறு பால் ஒன்றியங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நபார்டு வங்கியின் பால்வள உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியத்தின் கீழ் 304 கோடி ரூபாய் செலவில்
நான்கு திட்டங்களை மேற்கொள்வதற்கு மத்திய அரசின் அனுமதியை நாங்கள் எதிர்பார்த்துள்ளோம்.