https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/2/14/original/wKgACl5FHbaAK2ITAAAAAAAAAAA187.jpg

இவ்வாண்டு வளர்ச்சி இலக்குகளை நனவாக்க பாடுபடும் சீனா

by

திடீரென ஏற்பட்ட தொற்று நோய், சீனாவுக்கு அறைகூவலாக மாறியுள்ளது. உலகளவிலும் கவலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், நோயைத் தடுக்க சீனாவினால் முடியுமா, இவ்வாண்டு பொருளாதார சமூக வளர்ச்சிகளை நனவாக்க சீனாவினால் முடியுமா, உலகப பொருளாதாரத்திற்கு பெரிய தாக்கம் ஏற்படுமா ஆகிய கேள்விகள் எழுந்துள்ளன.

12ஆம் நாள் புதன்கிழமை, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் தலைமை தாங்கிய கூட்டத்தில், கரோனா வைரஸ் நிலைமை ஆய்வு செய்ப்பட்டு, வைரஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பணிகளைத் தீவிரமாக்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பிறகு வெளிவந்த தகவல்களில் இருந்து, இரண்டு முக்கிய அறிகுறிகள் வெளிக்காட்டப்பட்டன

முதலில், நோய் பரவுவது குறைந்துள்ளதுடன், தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பணியில் ஆக்கப்பூர்வப் பயன் கிடைத்துள்ளது.

இரண்டாவதாக, நோய் தடுப்பையும் பொருளாதார சமூக வளர்ச்சியையும் ஒன்றிணைக்க வேண்டும்.

இத்தகைய தகவல்களே, சீன மக்களுக்கு ஊக்கமளிப்பதாகவும், உலகிற்கு நம்பிக்கை அளிப்பதாகவும் உள்ளது. உலகின் 2ஆவது பெரிய பொருளாதாரமாக திகழும் சீனா நன்கு வளர்ச்சி அடைந்தால், உலகம் நன்மை பெறும் என்பதில் ஐயமில்லை. 

தற்போது, தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பணியில் ஆக்கப்பூர்வ பயன் கிடைத்து வருகிறது. இது, சீனா இவ்வாண்டு வளர்ச்சி இலக்குகளை நிறைவேற்றுவதற்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கும்.

அதேசமயம், சீனாவில் மேலதிக தொழில் நிறுவனங்கள் உற்பத்தி நடவடிக்கைகளை மீட்டெடுத்து வருகின்றன.

உயிருணு போலவே, தொழில் நிறுவனம், பொருளாதாரத்தின் அடிப்படைப் பகுதியாகும். தொழில் நிறுவனம் கூடிய விரைவில் மீண்டும் இயல்பாக இயங்கினால், பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு துணைபுரியும். நோய் காரணமாக, சீனாவின் தொடர்பு தொழில்களுக்கு பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. இந்த சவாலைச் சமாளிக்கும் விதமாக, தொழில் நிறுவனங்கள் முனைப்புடன் செயல்பட்டு வருவதைத் தவிர, அரசின் கொள்கை ஆதரவுகளும் முக்கிய பங்கு வகிக்கிறது.

சமீபத்தில், சிச்சுவான் மாநிலத்தில் நோயினால் பாதிக்கப்பட்ட தேயிலை உற்பத்தி நிறுவனம் ஒன்று, 24 மணிநேரத்துக்குள் வங்கியில் இருந்து 20 இலட்சம் யுவான் கடன் பெற்றது. இத்தகைய இன்னல்களைச் சந்திக்கும் நிறுவனங்கள், பல்வகை ஆதரவுகளின் மூலம் மீண்டும் இயங்க முடியும்.

புதன்கிழமை இக்கூட்டத்தில், பொருளாதராத்தின் சீரான வளர்ச்சியை நிலைநிறுத்துவது, தொழில் நிறுவனங்கள் இயல்பாக இயங்குவதற்கு உதவி அளிப்பது ஆகியவை குறித்து விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாண்டு, குறிப்பிட்ட வசதியான சமூகத்தை உருவாக்கும் இலக்கை சீனா நனவாக்கும். நோய் ஏற்பட்டுள்ள போதிலும், இந்தச் சவால் மற்றும் இன்னல்கள் கண்டு சீன மக்கள் அஞ்ச மாட்டர். வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெறுவது மட்டுமல்லாமல், திட்டமிடப்பட்ட இலக்குகளையும் சீனர்கள் நனவாவாக்குவர்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்
 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!