நடிகை சினேகாவின் 2-வது குழந்தையின் பெயர்!
by DIN2009-ல் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் பிரசன்னாவும் சினேகாவும் இணைந்து நடித்தபோது இருவருக்குமிடையே காதல் உண்டானது. 2011-ல் காதலை வெளியுலகுக்கு அறிவித்தார் பிரசன்னா. 2012-ல் இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டார்கள். 2015-ல் ஆண் குழந்தை பிறந்தது. விஹான் எனப் பெயர் சூட்டினார்கள்.
கடந்த மாதம் சினேகாவுக்கு 2-வதாகப் பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு ஆத்யந்தா (Aadhyantha) எனப் பெயர் சூட்டியுள்ளதாக நடிகர் பிரசன்னா தகவல் தெரிவித்துள்ளார். மகளுக்குப் பதிலாக மீண்டும் மகன் பிறந்திருந்தால் ஆத்யா (Aadya) எனப் பெயர் சூட்டவிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.