கொரோனா வைரஸ் - இதுவரை 1483 பேர் பலி

சீனாவின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரத்தில் முதன்முதலாக பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது. உலகம் முழுவதும் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 25 க்கும் அதிகமான நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளது.

கடுமையான சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தி உயிரிழப்பை ஏற்படுத்தும் இந்த வைரசினால் சீனாவில் 1350 பேர் பலியாகியுள்ளதாகவும், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் சீன அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பினால் பலியானோர் எண்ணிக்கை 1483 ஆக உயர்ந்துள்ளதாக சீன சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழப்பதால் அந்நாட்டு மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். நேற்றும் மட்டும் சீனாவில் 116 பேர் பலியாகியுள்ளனர்.