http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_Fe_2020__977520167827607.jpg

தமிழக பட்ஜெட்டில் மீன்வளத்துறைக்கு ரூ.1129.85 கோடி, போக்குவரத்து துறைக்கு ரூ.2716.26 கோடி ஒதுக்கீடு

சென்னை : 2020- 21ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சராக 10வது முறையாக தமிழக பட்ஜெட்டை  ஓ பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், தொடர்ச்சியாக பெறப்படும் முதலீடுகள் தமிழகத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும் என்று கூறினார். மேலும் உலக பொருளாதார சூழலில் வீசும் எதிர்காற்றை தமிழகமும் எதிர்கொண்டு வருகிறது
என்றும் பொருளாதார நெருக்கடிகளை தமிழகம் திறமையாக சமாளித்துள்ளது என்றும் தெரிவித்தார்.  மேலும் அவர் உரையில் கூறியது குறிப்புகளாக பின்வருமாறு...

*ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூபாய் 6,754 கோடி.

*நகராட்சி நிர்வாகத்திற்கு மொத்தமாக ரூபாய் 18,540 கோடி.

*பள்ளிக்கல்வித்துறைக்கு அதிக பட்சமாக ரூபாய் 34,181 கோடி. உயர் கல்வித்துறைக்கு ரூபாய் 5,052 கோடி.

*சுகாதாரத்துறைக்கு ரூபாய் 15,863 கோடி. உணவு மானியத்திற்கு ரூ.6,500 கோடி.

*தமிழக அரசு ஊழியர்களுக்கான ஊதியம் ரூ64,208.55 கோடி ஒதுக்கீடு; ஓய்வூதியத்துக்கு ரூ33,009.35 கோடி ஒதுக்கீடு

*சேலம், கிருஷ்ணகிரி, மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ.218 கோடி செலவில் மேலும் 8 வேளாண் பதப்படுத்தும் மண்டலங்கள்

*ஏழை எளிய மக்களுக்கான விரிவான விபத்து காப்பீடு திட்டத்திற்கு ரூ.250 கோடி ஒதுக்கீடு

*ரூ.3000 கோடி செலவில் சென்னையில் பேரிடர் தணிப்பு திட்டத்திற்கு பரிந்துரை

*சென்னையில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க ரூ.100 கோடி மானியம்

*4,997 விசைப்படகுகளில் ரூ.18 கோடியில் தகவல் தொடர்பு டிரான்ஸ்பான்டர்கள் பொருத்தப்படும். வேளாண் துறைக்கு 11894 கோடி ரூபாய் ஒதுக்கீடு .

*மீன்வளத்துறைக்கு ரூ.1129.85 கோடி ஒதுக்கீடு