முடக்கப்படும் தமிழர் தாயகம்: அம்மானுக்கு ஆப்பிள் யூஸ்?

by
https://1.bp.blogspot.com/-LA7ZC2iQDUw/XkZ4ewc6DzI/AAAAAAAAOc4/X8V8hxVQtLM-IvHO_W3e1z8FEuIwZ2kGQCNcBGAsYHQ/s1600/kar.jpg

வடக்கு கிழக்கு தெற்கு என எந்த பேதமும் இல்லாமல் அரச நிருவாகம் , நீதித்துறை , வெளிநாட்டு சேவைகள் என எல்லா துறைகளையும் தகுதியற்றவர்கள் மூலம் சீரழித்து வருகிறது கோத்தபாயா ராஜபக்சே ஆட்சி பீடம் என அம்பலப்படத்தியுள்ளார் சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒருவர்
வடகிழக்கில் டக்ளஸ் மற்றும் கருணா போன்றவர்களை மீள எழுச்சியடைய வைக்க கோத்தா தரப்பு முற்பட்டுள்ளது.
 வடக்கு கிழக்கின் சகல அரசாங்க அதிபர்களும் பந்தாட பட்டு இருக்கிறார்கள். தகுதி / திறமைகளுக்கு அப்பால் தங்களுக்கு வேண்டப்பட்டவர்கள் கொண்டு வெற்றிடங்களை நிரப்புகிறார்கள். வவுனியா மாவட்டத்திற்கு Saman Bandulasena என்கிற சிங்கள அதிகாரி நியமிக்கப்பட்டு இருக்கிறார். திருகோணமலை மாவட்டத்திற்கு மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க என்கிற இராணுவ அதிகாரி முன்மொழியப்பட்டு இருக்கிறார். அம்பாறை மாவட்டத்திற்கு D.M.L.Bandaranayake என்கிற சிங்கள அதிகாரி நியமிக்கப்பட்டு இருக்கிறார்
 மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைமை பதவிகளுக்கு மாவட்ட பாராளமன்ற உறுப்பினர்களை தவிர்த்து ராஜபக்சே அரசாங்கத்திற்கு விசுவாசமான தங்கள் கட்சியை சேர்ந்த சிங்களவர்களையும் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒட்டுக்குழுக்களையும் நியமித்து வருகிறார்கள். வவுனியா மாவட்டதிற்கு பொதுஜன பெரமுன கட்சியின் மாவட்ட அமைப்பாளர் திரு. தர்மபால செனவிரட்ன நியமிக்கப்பட்டு இருக்கிறார். கிளிநொச்சி மாவட்டத்திற்கு EPDP சந்திரகுமார் நியமிக்கப்பட்டு இருக்கிறார். அம்பாறை மாவட்டதிற்கு திருமதி. ஸ்ரீயாணி விஜேவிக்ரம நியமிக்கப்பட்டு இருக்கிறார்
அங்கஜன் இராமநாதனின் சித்தப்பா மகன், அங்கஜன் இராமநாதனின் மச்சான் உறவு முறையான ஆள் ,டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி உதவியாளர் , வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பும் முகவர் என தகுதியற்றவர்களை கொண்டு யாழ்ப்பாண பல்கலை பேரவையை நியமித்து இருக்கிறார்கள்
 மேல்முறையீட்டு நீதிமன்றதின் தலைமை நீதிபதியாக A.H.M.D Nawaz நியமிக்கப்பட்டு இருக்கிறார். இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவால் (Bribery Commission for corruption) ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான முதல் நீதித்துறை சார்ந்த அதிகாரி இவர் ஆவார் . இவர் மீதான ஊழல் வழக்கு (வழக்கு எண்: 87741/01/18 ) இன்றும் உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
 "தாடி பிரியந்த" என அழைக்கப்பட்ட C.A.Chandraprema என்கிற கொலை வழக்குகளுடன் தொடர்புடைய ஒருவரை ஜெனிவாவிற்க்கான தூதுவராக நியமித்து இருக்கிறார்கள். JVP கிளர்ச்சியின் பொது இலங்கை இராணுவத்துடன் சேர்ந்து இயங்கிய மக்கள் புரட்சிகர செம்படை என்கிற துணை ஆயுத குழுவின் உறுப்பினரான இவர் என்கிற இரண்டு மனித உரிமை சார்ந்த இரண்டு சட்டத்தரணிகள் Charita Lankapura and Kanchana Abhayapala கொலையுடன் நேரடியாக தொடர்புடைய கொலையாளி என சொல்லப்படுகிறது.